தூத்துக்குடி: துரோகத்துக்குப் பெயர் பெற்ற முதல்வர் பழனிசாமி அதுகுறித்துப் பிறருக்குப் பாடம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருக்கும் 3 வயது குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை யாரைக் கேட்டாலும் துரோகத்துக்கு மறுபெயர் எடப்பாடி பழனிசாமி எனக் கூறுவார்கள் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். முதல்வர் பழனிசாமிதான் தற்கால எட்டப்பன் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அமைச்சர்கள் பலர் அதிகார மமதையில் பல்வேறு கருத்துகளையும் வாய்க்கு வந்தவற்றையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். "இந்தப் பேச்செல்லாம் அதிகாரமும் ஆட்சியும் இருக்கும் வரைதான். இந்த ஆட்சி முடியும்போது அவர்கள், சுய புத்திக்கு வருவார்கள். அப்போது அவர்களுடைய உண்மை முகம் வெளிப்படும்," என்றார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன்: சிலர் அதிகார மமதையில் பேசுகிறார்கள்
1 mins read

