சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகள் கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட விரும்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், தனித்துப் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமை தான் இறுதி முடிவெடுக்கும் என்றார்.
அந்தந்த இடங்களில் உள்ள கள நிலவரத்தைப் பொறுத்துச் செயல் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.