சென்னை: தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல், தொழில்நுட்ப பட்டப் படிப்பை படித்துவந்த மோகனப்பிரியா என்ற மாணவி படித்துக்கொண்டே பகுதி நேரமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
கையும் களவுமாகப் பிடிபட்டதை அடுத்து போலிசாரால் கைது செய்யப்பட்டவர், வழக்கம்போல ஆடம்பரமாக வாழவே திருடியதாக போலிசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
சென்னை மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைவிட அன்பாகப் பேசி திருடுபவர்கள் குறித்த தக வல்கள் ரயில்வே போலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காலையில் கல்லூரிக்குச் செல்லும் மோகனப்பிரியா மாலையில் ரயிலின் கூட்ட நெரிசலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார்.
நளினமாக உடை அணிந்தி ருக்கும் மோகனப்பிரியா ரயில்பெட்டி யின் இருக்கையில் அமர்ந்தபடி நின்றுகொண்டிருக்கும் பெண்க ளிடம் “உங்களின் கைப்பையைக் கொடுங்கள், எதற்கு சிரமப்படு கிறீர்கள்? நான் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன்,” என்று அன்பாகக் கேட்டு இந்த திருட்டு களை அரங்கேற்றியுள்ளார்.
மற்ற ரயில் பயணிகளின் கைப்பையில் இருந்து பணப்பை, கைபேசி ஆகியவற்றை எடுத்த தையும் போலிசார் நேரில் பார்த்து உள்ளனர்.
பயணிகளின் உடைமைகளைத் திருடிய குற்றத்துக்காக மோகனப்பிரி யாவைக் கைது செய்த போலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.