திருப்பூர்: திருப்பூர் அருகே தனது பேரன், பேத்திகளுக்கு கொடுப்பதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட செல்லாத நோட்டுகள் என்பதை அறிந்து இரு மூதாட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்வேறு வேலைகளுக்கும் சென்று சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணம் வீணாகிவிட்டதே என்று சோகமாகினர்.
பல்லடம் அருகே பூமலூரில் ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற இரு மூதாட்டிகளும் அவர்களது மகன்கள் வீட்டில் வசித்து வரும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சைக்குப் போதிய பணமின்றி தாங் கள் சேமித்து வைத்திருந்த ரூ.46,000 பணத்தை எடுத்து மகன்களிடம் கொடுத்துள்ளனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள் அவை செல்லாத பணம் என்று கூறினர். அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.