மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
99b40f44-6e3c-4d60-b790-99822f0d9e15
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படம்: ஊடகம் -

உலக அளவில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், மீனாட்சி அம்மன் கோயில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் உள்பகுதியிலும் நுழைவுப் பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் குறிப்பிட்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்