கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக இருக்கும் 549 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு 7,000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான நேர்காணல், கோவையில் நடந்தது. 21 வயது முதல் 56 வயது வரையிலானவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேர்காணலுக்கு வந்தவர்களின் கல்வி தகுதியைக் கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். வந்தவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருந்தனர். இரண்டு பட்டங்களைப் பெற்றவர்கள், பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பலரும் துப்புரவாளர் வேலைக்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் நேர்காணலில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வந்ததால் கூட்டத்தை போலிஸ் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. நகரில் செய்யவேண்டிய துப்புரவு வேலைக்குப் பெரும் படிப்பு படித்தவர்கள் அதிக அளவில் குவிந்து இருப்பது மாநிலத்தில் வேலை இல்லாத நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாநகர துப்புரவு வேலைக்கு குவிந்த பொறியியல் பட்டதாரிகள்
1 mins read

