தமிழ்நாட்டில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம்

தமிழ்நாட்டில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம்

1 mins read

வேலூர்: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். வேலூர் மாவட்டத்தை, வேலூரைத் தலைமையிடமாக கொண்ட வேலூர் மாவட்டம் என்றும் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்ட ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களாகவும் அரசாங்கம் பிரித்துள்ளது. இந்தப் புதிய மாவட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. அதில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து கொண்ட முதல்வர், தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார்.