மதுரை: மதுரை திருநகரைச் சேர்ந்த வேலுச்சாமி, 82, என்பவருக்கும் கஸ்தூரி, 80, என்பவருக்கும் கடந்த 1962-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டியில் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்களுக்கிடையே மணவிலக்கு வழக்குத் தொடுக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி கஸ்தூரி தரப்பில் கோரப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் விவாகரத்து வழங்கும்படி வேலுச்சாமி தரப்பில் கோரப்பட்டது. முடிவில், அவர்களுக்கு மணவிலக்கு வழங்கி நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

