தமிழக மீனவர் படகுகள் விடுவிப்பு

தமிழக மீனவர் படகுகள் விடுவிப்பு

1 mins read

இந்தியா சென்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று கூறினார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி சென்று சேர்ந்த அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரை வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு கோத்தபய, தம்முடைய இந்தியப் பயணம் குறித்த எதிர்பார்ப்பு மிகப் பெரியது என்றார்.