பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜாவை வெளியேற்ற முயற்சி

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பல ஆண்டுகாலமாக இசையமைத்து வரும் பிரசாத் ஸ்டுடியோவின் அறையிலிருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதை அறிந்த முன்னணி இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றோர் அங்கு முற்றுகையிட்டனர்.

இதனால் பிரசாத் ஸ்டுடியோவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பு ‘எடிட்டிங்’ வேலைகள் நடைெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நட்பின் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.

அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கூடம் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசை அமைத்து உள்ளார்.

தற்போது, ‘பிரசாத் ஸ்டுடியோ’ நிர்வாகம் வேறு ஒருவரிடம் அந்த அறையை ஒப்படைத்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதையடுத்து இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி நடக்கிறது.

ஏழு மாதத்துக்கு முன்பு ஸ்டுடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையைத் தந்தால் நல்லா இருக்கும் என்று பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் கேட்க அதற்கு இளையராஜா சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது திடீரென ‘அந்த இடத்தை நாங்க யாருக்கும் தருவதாக இல்லை. காலி செய்துவிடுங்க’ என்று இளையராஜா தரப்பிடம் சொன்னதாக தெரிகிறது.

இதனால் இசைக்கூடத்தைக் காலி செய்ய அவகாசம் வேண்டும் என இளைய ராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் உடனடியாக காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதற்கிடையே இது குறித்து பேச்சு நடத்த, பிரசாத் ஸ்டுடியோவுக்கு இயக்குநர்கள பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜா, சீமான் ஆகியோர் வந்தனர்.

அப்போது சீமானை அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் கூறினர்.

இதனால் இயக்குநர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சிலர் ஸ்டுடியோவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பிறகு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இயக்குநரு களுக்கு இைடயே பேச்சுவார்த்தை நடைெபற்றதாகத் தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, இருதரப்பினரிடமும் சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். இளையராஜாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை ஏற்க முடியாது. அவருக்கு அவகாசம் வேண்டும். அதற்குள் நாங்கள் இளையராஜாவுக்கு மற்றோர் இடத்தை ஏற்பாடு செய்கிறோம். நான்கு நாட்களில் இறுதி முடிவு எடுத்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் தெரிவிப்போம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!