கொள்ளையன் முருகன்: தமிழகப் போலிசாரை விட பெங்களூர் போலிஸ்காரர்கள் நல்லவர்கள்

திருச்சி: தமிழகப் போலிசாரைவிட பெங்களூர் போலிஸ்காரர்கள் நல்லவர்கள் என்பதால்தான் நான் பெங்களூரில் சரணடைந்தேன் என்று அண்மையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த திருவாரூர் முருகன் கூறியுள்ளான்.

“என்னை அடித்தால் செத்துவிடுவேன். அதற்குப் பிறகு உங்கள் இஷ்டம்,” என்று மிரட்டும் தொணியில் பேசி விசாரணை நடத்தும் போலிசாரை அதிர வைத்துள்ளான் முருகன்.

இப்போது திருச்சி மாநகர தனிப்படை போலிசாரின் கண்காணிப்பில் இருந்துவரும் முருகன் விசாரணையின்போது கூறுகையில், “குற்றவாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதில் பெங்களூரு போலிசாருக்கு நிகர் வேறு யாருமில்லை.

“மாட்டை அடிப்பதுபோல் கைதி களை அடித்துத் துன்புறுத்தும் தமிழகப் போலிசார் போல் பெங்களூரு போலிசார் நடந்துகொள்ள மாட்டார்கள்.

“பெங்களூர் சிறைச்சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும். அதேபோல் கழிவறைகளும் சுத்தமாக இருக்கும். தண்ணீர் தட்டுப்பாடு என்பது அறவே இருக்காது.

“நல்ல சத்துள்ள உணவாக கொடுப்பார்கள் என்பதால் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தேன்,” என்று முருகன் கூறியதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

நகைக்கடையில் கொள்ளை யடித்த நகைகளை கர்நாடக போலிசாரிடமும் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை திருச்சி மாவட்ட தனிப்படையினரிடமும் கொடுத்துவிட்டதாக முருகன் கூறியுள்ளான்.

கொள்ளை போன நகைகளில் இன்னும் இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்படவேண்டிய நிலையில், உடல்நிலை சரியில்லாத முருகனிடம் எப்படி நகைகளை பறிமுதல் செய்வது என்பது தெரி யாமல் திருச்சி மாநகரப் போலிசார் விழித்துக்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!