நச்சுவாயு தாக்கி தொழிலாளி பலி

ஆத்தூர்: சேலத்தில் நச்சுவாயு தாக்கியதில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி தாலுகாவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலாயுதம், மணி, காங்கமுத்து, கலியன், சேகோ ஆலை உரிமையாளர் மாணிக்கம் ஆகியோர் தயாராகினர். அப்போது மேற்புற மூடியை திறந்தவுடன் எதிர்பாராத விதமாக நச்சுவாயு தாக்கியதில் இவர்கள் எல்லாரும் தொட்டியில் தவறி விழுந்தனர். இவர்களில் மணி என்ற தொழிலாளி உயிரிழந்தார். மற்ற நால்வரும் ஆத்தூர் மருத் துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். படம்: ஊடகம்