ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியவர் மீது வழக்கு

நாகை அருகே பெருமாள் கோயில் தெற்கு வீதியில் உள்ள கடையில் வாங்கிய அரிசியின் தரம் சரியில்லை என்று கூறி அரிசியைச் சாலையில் கொட்டிய ரமணி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமணியின் விருப்பத்துக்கு இணங்க அவர் அரிசியைச் சாலையில் கொட்டியதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது. தலைமறைவாகிவிட்ட ரமணியை போலிஸ் தேடி வருகிறது. 

படம்: தமிழக ஊடகம்