சேலம்: அதிமுக பிரமுகர் குமாரசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா போதைப்பொருளைப் பதுக்கிவைத்து விற்று வந்த சந்தேகத்தின்பேரில் ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை போலிஸ் கைது செய்தது.
மொத்தம் 1.25 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதலானது. நால்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரண்டு பேரை போலிஸ் தேடுகிறது. வீட்டை வாடகைக்குக் கொடுத்த குமாரசாமிக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலிஸ் தெரிவித்தது.