தேவகோட்டை: நகைச்சுவை நடிகர் வடிவேலு, தமிழ்நாட்டின் அனைத்து அமைச்சர்களின் நகைச்சுவையைப் பார்த்து நடிப்பதையே விட்டுவிட்டார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துவதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம் என்றும் இந்தப் பழியைத் திமுக மீது போடுவது சரியில்லை என்றும் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் சொல்வது செய்வது எல்லாம் ஒரே நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.