சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமனம்

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் மேலும் ஓர் ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதற்கிடையே, சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக  இருந்த பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்தது. இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு (படம்) நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே காவல் துறையின் நிர்வாக ஐ.ஜியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.