உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

புதுடெல்லி: மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்து உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் எனத் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம் தேதி அறிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்து உள்ளது.

அதில் தொகுதி வார்டு மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்தபின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி மனு அளித்துள்ளது.

தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் திமுக சார்பில் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்று இன்று விசாரிக்க உள்ளது.

அத்துடன் 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது.

முறைகேடுக்கும் குளறுபடிக்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையைச் செய்வதற்கே உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தமிழக மக்களுக்கு இருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்துவது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முடித்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது அனைவருடைய கோரிக்கையாக இருக்கிறது.

தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி அறிவித்ததாக தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பேரிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!