புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று மதிமுக உறுப்பினர் வைகோ, ஆந்திரம், கேரளா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களைப் போல மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற அமைப்பு இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்தைத் தவிர இந்தியும் இருப்பதைப் போல், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளையும் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வைகோ பேசினார்.