சென்னை: சென்னையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவியது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்தது. குடிநீருக்கே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீட்டுத் தேவைகளுக்காக தண்ணீருக்கு மன்றாடினர். ஒரு லாரி தண்ணீர் ரூ.10,000 வரை விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்துத் தண்ணீர்த் தட்டுப்பாடும் தீர்ந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 2 அடி வரை உயர்ந்துள்ளது.