நலமான மகப்பேறு: திருச்சி முதலிடம்

திருச்சி: நலமான மகப்பேற்றில் திருச்சி அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி  துறைத் தலைவியான வனிதாமணி, திருச்சி தலைமை  அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 30 மகப்பேறு  பார்க்கப்படுகிறது என்றார். 

  மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் 71% சுகப்பிரசவமும் 29% அறுவை சிகிச்சை மகப்பேறுவும் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், நலமான மகப்பேற்றைப் பொறுத்தவரை  மாநில அளவில், திருச்சி அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளதாகக் கூறினார்.