பெண் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்குப் பிணை

பெண் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்குப் பிணை

1 mins read

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய தீட்சிதர் தர்ஷனுக்குப் (கோப்புப்படம்) பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயிலில் அந்தத் தீட்சிதர் தன்னைத் தாக்கிவிட்டதாக லதா என்ற பக்தை தெரிவித்த புகாரை அடுத்து தீட்சிதர் தர்ஷனை போலிஸ் தேடி வந்தது. அவர் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிணை கிடைத்ததை அடுத்து தீட்சிதர் சிதம்பரம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

உரிய ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர் தர்ஷனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.