'மணமுடிக்காமல் ஆணும் பெண்ணும் இணைந்து தங்குவது குற்றமாகாது'

சென்னை: திருமணமாகாத ஓர் ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் மணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும் மற்றோர் அறையில் மது போத்தல்கள் இருந்ததாலும் அந்த விடுதியை அதிகாரிகள் இழுத்து பூட்டிவிட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘சேர்ந்து வாழ்தல்’ முறையில் சேர்ந்து வாழ்வதை எப்படி குற்றமாகக் கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என்று தெளிவு படுத்தியது.