சுடச் சுடச் செய்திகள்

குப்பைத் தொட்டியில் வீசிய குழந்தை மீட்பு

ஜோலார் பேட்டை: ஜோலார் பேட்டை ரயில் நிலையம் ஓம்சக்தி கோவில் அருகே நகராட்சி குப்பைத் தொட்டியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகு தியைச் சேர்ந்த செல்வி என்பவர் 7 மாத பெண் குழந்தையைத் தூக்கினார். எறும்பு, கொசுக்கடியால் குழந்தையின் உடல் முழுவதும் காயம் இருந்தது.

குழந்தையை அவர் ஜோலார்பேட்டை போலிசில் ஒப்படைத்தார். 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. போலிசார் குழந்தையை பொறுப்பற்று வீசிச் சென்றவர்கள் யாரென விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon