'தமிழகத்தில் தொழில் தொடங்க இதுவே பொற்காலம்'

'தமிழகத்தில் தொழில் தொடங்க இதுவே பொற்காலம்'

1 mins read
5d63601e-1e3f-4f1b-9986-0adffff2db0b
தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுவதாகவும் அம்மாநிலத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: புதிய தொழில் தொடங்கும் முதலீட்டாளர் களுக்கு வழங்க தமிழகம் முழுவதும் 8,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாகவும் தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுவதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 43 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்றார்.