சுடச் சுடச் செய்திகள்

தேர்தலில் பொதுச் சின்னம் பெற போராடுகிறது அமமுக

சென்னை: அமமுக மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்குப் பொதுச் சின்னம் ஒதுக்க மாநிலத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 

இதையடுத்து பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி அமமுக தலைமை நீதிமன்றத்தை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று முன்தினம் அமமுக பொருளாளர் வெற்றிவேலும், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். 

அப்போது அமமுகவுக்குப் பொதுச்சின்னம் வழங்க முடியாது என அவர் தெரிவித்ததாக இருவரும் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினர்.

“சட்ட விதிகளின்படி அமமுகவுக்குப் பொதுச்சின்னம் வழங்க முடியாது எனத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். இது குறித்த உத்தரவை எழுத்துபூர்வமாக வழங்கும்படி கேட்டுள்ளோம். 

“அந்த உத்தரவு கிடைத்ததும் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். எனினும் நீதிமன்றம் உத்தரவிட்டால் பொதுச்சின்னம் ஒதுக்குவதாகத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்,” என்று வெற்றிவேல் தெரிவித்   தார்.

அமமுக கட்சி தேர்தல் ஆணை யத்தில் பதிவு செய்யப்பட்டது தினகரன் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon