சுடச் சுடச் செய்திகள்

தண்ணீர் மாஃபியா: நீதிபதிகள் கவலை

சென்னை: தமிழகத்தில் தண்ணீரைச் சேமித்து வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தற்போது சுதாரித்து விழித்துக்கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தண்ணீர் திருட்டைத் தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை விசாரிக்கும்போதே நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். மேலும் மணல் மாஃபியா போன்று தண்ணீர் மாஃபியாக்களும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.