காஞ்சிபுரம் அருகே இரண்டாவது விமான நிலையம் அமையும் என தகவல்

காஞ்சிபுரம் அருகே இரண்டாவது விமான நிலையம் அமையும் என தகவல்

1 mins read

புதுடெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

வெளியாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை விமான நிலைய ஆணையம் இன்னும் ஒரு வாரத்தில் அளிக்க இருப்பதாகவும் அதன் பின்னர் இரண்டாவது விமான நிலையம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.