2வது மனைவிக்காக முதல் மனைவியைக் கொன்ற ஆசிரியர்

2வது மனைவிக்காக முதல் மனைவியைக் கொன்ற ஆசிரியர்

1 mins read
7c4dceae-8626-4dc9-9053-03146d3a7f26
இரண்டாவது மனைவி மீது கொண்டிருந்த ஆழ்ந்த காதல் காரணமாக முதல் மனைவியைத் தீர்த்துக்கட்டிய முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன். படம்: ஊடகம் -

விழுப்புரம்: இரண்டாவது மனைவி மீது கொண்டிருந்த ஆழ்ந்த காதல் காரணமாக முதல் மனைவியைத் தீர்த்துக்கட்டிய முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.

கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜன், 61, என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி சென்ற ஆண்டு ஓய்வு பெற்றவர்.

இவருடைய முதல் மனைவியான இந்திரா, 51, என்பவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார்.

நடராஜனுக்கு லீலா என்ற இரண்டாவது மனைவி உண்டு.

இந்நிலையில் இந்திரா சென்ற சனிக்கிழமை அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருந்ததை போலிஸ் கண்டுபிடித்தது.

போலிஸ் நடத்திய விசாரணையில் நடராஜன் தன்னுடைய இரண்டாவது மனைவி மீது வைத்திருந்த ஆசை காரணமாக முதல் மனைவியைக் கொலை செய்துவிட்டார் என்பது தெரியவந்தது.

நடராஜன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் பல கோணங்களில் போலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.