மின்சாரம் பாய்ந்து மூவர் மரணம்

மின்சாரம் பாய்ந்து மூவர் மரணம்

1 mins read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அந்தக்குடிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், 30, இளையராஜா, 25, என்ற சகோதரர்கள், பாரி, 45, என்ற உறவினருடன் சேர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் மழை நீர் வடிவதற்காக தகர தகட்டைப் பொருத்தியபோது மின்சாரம் பாய்ந்து மாண்டுவிட்டனர்.