தலைவர் பதவி: ஒருவர் கொலை

தலைவர் பதவி: ஒருவர் கொலை

1 mins read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக கிளைச் செயலாள ரான ராமசுப்பு என்பவர் தரப்புக்கும் அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் என்பவருக்கும் இடையில் மூண்ட தகராறில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் ராமசுப்பு, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.