சிறுமிகளை விற்ற பாட்டி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, 14, கவிதா, 13, என்ற தாய், தந்தையற்ற சிறுமிகளை அவர்களின் பாட்டியான விஜயலட்சுமி என்பவர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் என்ற இருவரிடம் ரூ.10,000க்கு விற்றுவிட்டதாகத் தெரிகிறது. 
   இதன் தொடர்பில் விஜயலட்சுமி, சகுந்தலா, கனகம் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஈரோட்டில் வேலை பார்க்கும் சிறுமிகளை மீட்க போலிஸ் விரைந்தது.