கணவரை அடித்தே கொன்ற பெண்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கரியமாணிக்கப் புரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
இவரது மனைவியான கிருஷ்ணவேணி என்பவர், கணவர் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு கட்டையை எடுத்து கணவரை அடித்தே கொன்றார். பிறகு கணவர் இறந்துவிட்டதாக நாடகம் ஆடி கடைசியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.