ராமலிங்கம் கொலை வழக்கு: துப்பு தருவோருக்கு வெகுமதி

ராமலிங்கம் கொலை வழக்கு: துப்பு தருவோருக்கு வெகுமதி

1 mins read
Google News Preferred Icon

கும்பகோணம்: திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் அறுவரைப் பற்றித் தகவல் தந்தால் ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என தேசிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

பாத்திரக்கடை வைத்திருந்த திரு ராமலிங்கம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றத்தைத் தட்டிக் கேட்டதால் அவர் கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ரஹ்மான் சாதிக், முகம்மது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹாதீன், சாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய அறுவரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.