சென்னை: நாயுடன் நடைப் பயிற்சி செய்யும் பலரை நாம் கண்டிருக்கலாம். ஆனால், சென்னையைச் சேர்ந்த திருமதி தேவிகா கிருஷ்ணன் நாள்தோறும் சேவலுடன் நடைப்பயிற்சி செல்கிறார் என்பது வியப்பான தகவல். புற்றுநோயால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதைச் செய்ய முடியாமல் தவித்த நிலையில் சில கோழிக் குஞ்சுகளை இவரின் மகள் வாங்கித் தந்துள்ளார். அவற்றுள் 'லவ் குமார்' என்ற இந்தச் சேவல், இவரின் அன்புக்குரிய செல்லப் பிராணியாகி, இவருடன் 'வாக்கிங்' செல்கிறது. மகிழ்ச்சியாக இருந்தால் முத்தமிடுவது, கோபம் வந்தால் கொத்துவது என 'லவ் குமார்' அந்த வீட்டில் ஒய்யாரமாக பவனி வருகிறதாம்!
சேவலுடன் நடைப்பயிற்சி
1 mins read
சேவலுடன் நடைப்பயணம் செல்லும் சென்னையைச் சேர்ந்த திருமதி தேவிகா கிருஷ்ணன். -

