'பைக்'கில் பாம்பு

'பைக்'கில் பாம்பு

1 mins read

தென்காசி: மோட்டார்சைக்கிளில் புகுந்த நல்ல பாம்பு ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்களிடம் பிடிபட்டது. தென்காசியை அடுத்த மேலகரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் சிறியதொரு பாம்பு நுழைந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்கு அவர் தகவல் அளித்தார். பாம்பை மீட்கும் முயற்சியைக் காண ஏராளமானோர் திரண்டனர். மீட்கப்பட்ட பாம்பு பிறகு வனப் பகுதிக்குள் விடப்பட்டது.