சென்னை: சூரிய ஒளி, காற்று முதலான இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்த நிதி ஆண்டில் அக்டோ பர் வரைப்பட்ட காலகட்டத் தில் கர்நாடகாவை தமிழ்நாடு முந்தியது. இந்தியாவிலேயே இதில் முதல் மாநிலமாக இப்போது தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டின் மொத்த இயற்கை மின்சக்தியில் ஏறக்குறைய 17.2 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தியாவதாக மத்திய மின் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் கர்நாடகா, குஜராத், ஆந்திரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சூரிய மின்சக்தி: தமிழகம் முதலிடம்
1 mins read

