பிரான்ஸ் பெண் பிரசாரம்: ‘எங்க மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க’

திருப்புவனம்: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி உள்ளார் பிரான்ஸ் பெண் ஒருவர். இவர் “எங்க மாமாவுக்கு வாக்கு போடுங்கள்,” என்று தமிழில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

வரும் 27, 30ல் இரு கட்டமாக நடத்தப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஜோ, பிரசாரத்தில் குதித்துள்ளது மக்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் ஊராட்சி ஒன்றியம், மேலராங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மருதுபாண்டி என்பவர் போட்டியிடுகிறார்.

இவரது உறவினர் முத்துச் செல்வம் ஊட்டியில் சுற்றுலா வழி காட்டியாக உள்ளார்.

பிரான்சை சேர்ந்த 19 வயது ஜோவுக்கு ஊட்டியை சுற்றிக்காட்டிய முத்துச்செல்வம் உள்ளாட்சித் தேர் தல் குறித்து விவரம் கூறியுள்ளார்.

இதையடுத்து தேர்தல் திரு விழாவைக் காண ஆசைப்பட்ட ஜோவை தனது சொந்த ஊரான மேலராங்கியம் அழைத்து வந்தார்.

மருதுபாண்டி திருப்புவனத்தில் மனுத்தாக்கல் செய்ய ஊர்வலமாகச் சென்றபோது அதில் பங்கேற்ற ஜோ, மக்களைக் கலகலப்பூட்டும் வகை யில் ‘எங்க மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க’ என பிரசாரம் செய்தார்.

ஜோ கூறுகையில், “பிரான்ஸ் டாகுலஸ் நகரைச் சேர்ந்த நான் பள்ளிப் படிப்பை முடித்துள்ளேன். இங்குள்ள மக்களின் கடவுள் பக்தி என்னை பிரமிக்க வைக்கிறது. திருநீறு, குங்குமம் பூசுவது மிகவும் பிடித்துள்ளது. தேர்தலுக்காக ஊர்வலம் செல்வது ஆச்சர்யமாக உள்ளது. இந்தியா வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பிரமிப்பாக உள்ளது,” என்றார்.

தமிழ் கலாசாரத்தின் மீது அதிக மதிப்பு வைத்துள்ள இவருக்கு வீடு தேடிச் சென்று வாக்கு சேகரிக்கும் முறையும் மிகவும் பிடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய மருதுபாண்டி, “தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள ஜோவுக்கு நமது பிரசார முறை மிகவும் பிடித்துப்போனதால் எங்கள் கிராமத்திலேயே தங்கி பிர சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் முடிந்த பின்புதான் அவர் பிரான்ஸ் நாட்டுக்கு மீண்டும் செல்வார்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!