சேவல் சண்டை: 15 பேர் கைது

சேவல் சண்டை: 15 பேர் கைது

1 mins read

ஓசூர்: மத்திகிரி அருகே சேவல் சண்டை நடத்திய 15 பேரை போலிசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கொத்தகொண்டப் பள்ளி ஏரிக்கரையில் சேவல் சண்டை நடப்பதாக மத்திகிரி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த 38 வயது முதல் 48 வயதுடைய 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் ஐந்து சேவல்கள், 75,000 ரூபாய் ரொக்கப் பணம், கார், ஐந்து இருசக்கர வாக னங்களையும் பறிமுதல் செய்தனர்.