சென்னை: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 32 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பணிக்குழு விவரங்களை வெளியிட்டனர்.
இதில் நிர்வாகிகள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அதிமுக முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வேட்பாளர் தேர்வுக்கான நடவடிக்கைகளும் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.