சிவகங்கை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று, தங்கள் வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது என உணர்த்தி வருகின்றனர் சிவகங்கை இளையர்கள்.
பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூர் பகுதியில் இயங்கி வருகிறது வ.உ.சி. நற்பணி மன்றம். இதில் உறுப்பினர்களாக உள்ள இளையர்கள், “எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” எனும் வாசகம் அடங்கியுள்ள பலகையுடன் வேட்பாளர்களின் வீடு தேடிச் செல்கிறார்கள்.
பின்னர் வேட்பாளர்களிடம் வாக்களிக்க பணம் தர வேண்டாம் என்ற கோரிக்கையை கடிதமாக எழுதித் தருகின்றனர்.