சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த 90 வயது மூதாட்டி கனகவல்லி திடீரென தனது மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். தனது மருமகளுக்காக இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் வீர பாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தார் கனகவல்லி. இந்நிலையில் அவரது மருமகளான 52 வயது புஷ்பாவும் இதே பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். இரு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மருமகளுக்கு வழிவிட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ளார் கனகவல்லி.
மருமகளுக்காக போட்டியிலிருந்து விலகிய 90 வயது மூதாட்டி
1 mins read

