சென்னை: திமுக பொதுச் செயலாளரான க. அன்பழகன் நேற்று 98வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தினர், ஆசி பெற்றனர்.
வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை மிகவும் தளர்ந்துவிட்ட அன்பழகன், தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு உள்ள அறிக்கையில், திராவிட இயக்கத்தை அனைத்து தரப்பினருக்கமான அடுக்குமாடி குடியிருப்பாக உருமாற்றியதில் அன்பழகனுக்கு இணையில்லாத பங்கு உண்டு என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அன்பழகன், திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்து அற்புதமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் ஸ்டாலின் தனது செய்தியில் தெரிவித்து உள்ளார்.