துருக்கி வெற்றி, எகிப்து தோல்வி

திருச்சி: தமிழ்நாட்டில் எகிப்து, துருக்கி வெங்காயத்திற்கு இடையே யார் பிரபலம் என்பதை முடிவு செய்யும் போட்டியில் எகிப்து தோற்றுதுருக்கி வென்று இருக்கிறது.

திருச்சி சந்தைக்கு வந்து சேர்ந்த அந்த நாடுகளைச் சேர்ந்த பெரிய வெங்காயத்தை வாங்க வந்த பலரும் எகிப்திய வெங்காயத்தை சீண்டகூட இல்லை.

அதேவேளையில், திருச்சி சந்தைக்கு வந்த 20 டன் துருக்கி வெங்காயமும் புதன்கிழமையே விற்று தீர்ந்துவிட்டது.

இதனையடுத்து துருக்கியில் இருந்து மேலும் 20 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வியாபாரிகள் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டின் மத்திய வட்டார மைய சந்தையான திருச்சியில் நாள் ஒன்றுக்கு 3,000 டன் வெங்காயம் இறங்கி, ஏறுகிறது. நேற்று முதல் தர வெங்காயம் 1 கிலோ ரூ. 110க்கு விற்பனையானது.

எகிப்திலிருந்து சென்ற வாரம் 30 டன் வெங்காயம் இறக்குமதியானதாகவும் ஆனால் அதன் கறுஞ்சிவப்பு நிறமும் கார நெடியும் மக்களைக் கவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

எகிப்திய வெங்காயத்தை கிலோ ரூ.90க்கு கொடுத்தும் வாங்க ஆளில்லை. “எனக்கு எகிப்திய வெங்காயம் பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது,” என்று எஸ். வெள்ளையன் என்ற வியாபாரி கூறினார்.

இந்தியாவில் விளைச்சல் சரியில்லாமல் போனதால் வெங்காயம் இறக்குமதியாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!