சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசும் 1,000 ரூபாய் பணமும் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதர 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த பொது நல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த விவரங்களை தமிழக அரசு தெரிவித்தது.