போத்தனூர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை, போத்தனூரைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணை போலிசார் கைது செய்தனர்.
மிரட்டல் விடுத்த பெண் கோவையை அடுத்த ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி சகுந்தலா, 47, என்பது தெரியவந்தது.
கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்ட சகுந்தலா அளித்துள்ள வாக்கு மூலத்தில் உறவினர்கள் கடன் தராததால் ஆத்திரத்தில் அவர்களை சிக்கவைக்க இப்படி செய்ததாகக் கூறியுள்ளார்.