நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தந்தையை முறைப்படி பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர் அதை தந்தை பூதத்தானிடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந் தவர் பூதத்தான் பிள்ளை, 85. இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.
இவருடைய மகன் முருகன், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 2015ல் பூதத்தான் தனக்கு சொந்தமான 7 வீடுகளையும் முருகனுக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தார். அந்த வீடுகளை முருகன் அவருடைய மனைவி சாந்தியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
சொத்துகளை எழுதி வாங்கிய போது தனது தந்தையைப் பரா மரிப்பதாக உறுதியளித்த முருகன், அண்மையில் தந்தையை வீட்டில் இருந்து விரட்டி அடித்துள்ளார்.
இதுதொடர்பாக பூதத்தானுக்கும் முருகனுக்கும் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகன் தந்தையை அரிவாளால் வெட்டினார்.
இதுகுறித்து உதவி ஆட்சியர் மணிஷ் நாரணவரே விசாரணை நடத்திய பின்னர், பூதத்தான் முருக னுக்கு எழுதிக்கொடுத்த சொத்து களுக்கான பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.