திருவொற்றியூர்: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்து அதில் மாதம்தோறும் வீட்டு வாடகையாக ரூ.1 லட்சம் பெற்றுவரும் வால்டர் செல்வராஜ் என்பவர், தனது 75 வயது தந்தையையும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனையும் வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த வர் சிம்சன்ராஜ், 75. இவரது இளைய மகன் வால்டர் செல்வ ராஜுக்குத் திருமணமாகி வேளாங் கண்ணி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.