மங்கலம்பேட்டை: வண்ண உடையின்றி பள்ளிச் சீருடையுடன் சென்ற ஏழை மாணவன் ஒருவனுக்கு உடை வாங்கிக் கொடுத்த போலிஸ் உதவி அதிகாரிக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையை அடுத்த ஆலடி காவல் நிலையத்தில் போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்.இவர் ஆலடி பகுதியில் ரோந்து சென்றபோது மாணவர்கள் வண்ண உடைகளில் சென்றனர். அதில் ஒரு மாணவர் மட்டும் சீருடையில் சென்றார். அந்த மாணவரிடம் விசாரித்தபோது, தான் கடலுார் புதுக்கடை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தொல்காப்பியன் என்றும் போதிய வசதி இல்லாததால் ஆலடியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். பள்ளியில் தந்த இரு சீருடைகள் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அச்சிறுவனுக்கு இரு ஜோடி வண்ண உடைகளை வாங்கிக் கொடுத்தார். படம்: ஊடகம்
ஏழை மாணவனுக்கு உடை வாங்கித் தந்த அதிகாரிக்குப் பாராட்டு
1 mins read
-

