சென்னை: தமிழகத்தில் வரும் 27, 30ஆம் தேதிகளில் இரு கட்டங் களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டி யிடுவதாகவும் 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
“இம்மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்புமனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
“அத்துடன் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
“இறுதியாக இப்போது 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
“இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர்,” என்று ஆணையம் கூறியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசி யல் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.
சில இடங்களில் வாக்காளர் களைக் கவர்வதற்காக பரிசுப் பொருட்கள், பணப் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்முறை யாக பறக்கும் படையும் அமைக்கப் பட்டுள்ளது.
இவர்கள் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நடவடிக்கையிலும் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட உள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐஏஎஸ் அதிகாரிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிலையில், பொதுமக்கள் பணப்பட்டுவாடா குறித்து புகார் கூறுவதற்கு வசதியாக அதிகாரிகளின் கைபேசி எண்களையும் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருவ தாகவும் சீட் கொடுப்பதுபோல் கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ் கட்சியினர் கட்சித் தலைமை வரை புகார் செய்துள்ளனர்.