சென்னை: வளரும் நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கான ஓர் அடையாள மாக அல்லது முன்மாதிரியாக சென்னையை அடையாளப் படுத்துவதில் உலக வங்கி ஆர்வம் தெரிவித்துள்ளதாக சென்னை நகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். உலக வங்கி குழுவினர் சென்னை யைச் சுற்றிப்பார்ப்பதற்காக வந்திருந்தபோது, கடந்த சில நாட்களாக தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்ச்சி யாக மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டங்களின்போது தி நகர் பிளாசா, கைபேசி செயலி பயன்பாடு அடிப்படையிலான பார்க்கிங் முறை, வாகனமற்ற போக்குவரத்துக் கொள்கையின் ஒரு பகுதியாக அகலமான பாதைகள் ஆகியவற்றை அதிகாரிகள் காண்பித்தனர்.
நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்களில் பலவற்றையும் பார்த்து உலக வங்கி அதிகாரிகள் வியப்படைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.